வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு

0 687
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடக மாநிலத்தில், முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடக மாநிலத்தில், முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண்துறையில் 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே நாளை அறிவிக்கப்பட்டபடி பந்த் நடைபெற்றாலும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என மாநில போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments