ஒரே இரவில் இரு நகைக்கடைகளின் சுவரில் துளையிட்டு 50 சவரன் நகை கொள்ளை

0 3482
ஒரே இரவில் இரு நகைக்கடைகளின் சுவரில் துளையிட்டு 50 சவரன் நகை கொள்ளை

அரியலூரில் ஒரே இரவில் இருவேறு இடங்களில் உள்ள நகைக்கடைகளின் சுவரில் துளையிட்டு நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் 50 சவரன் நகை திருடுபோயுள்ளது.

சின்னக்கடை தெருவில் இயங்கி வரும் பாலாஜி தங்க மாளிகை என்ற கடையின் சுவற்றில் துளையிட்ட திருடர்கள், அங்கு ஷோ கேஸ்களில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

செந்துறையில் ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று லாக்கரை உடைத்துக் கொண்டிருக்கும்போது சத்தம் கேட்டு அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் விழித்துக் கொண்டதால், திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் அந்தக் கடைக்குப் பின்னால் உள்ள தெருவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் தர்மலிங்கம் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்ச ரூபாய் பணம், 3 சவரன் நகை, ஒரு மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments