தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

0 4289
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த அறிவிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும், சென்னை பெருநகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments