தேசிய சித்த மருத்துவ மையத்தை தமிழகத்தில் அமைக்க பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தல்

0 1020
மத்திய அரசு தொடங்க திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

மத்திய அரசு தொடங்க திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

சித்த மருத்துவம் தோன்றிய தமிழகத்தில், இத்தகைய முன்னோடி மருத்துவ மையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதற்காக சென்னை அருகே சுத்தமான காற்று மற்றும் சாலை, ரயில் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இடம் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேசிய சித்த மருத்துவ மையம் நிறுவப்பட வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான சாதகமான பதிலை எதிர்பார்த்து இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments