இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் : குடியரசுத் தலைவருக்கு எம்.பிக்கள் 32 பேர் கடிதம்

0 1457
இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எம்.பி.க்கள் 32 கடிதம் எழுதி உள்ளனர்.

இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எம்.பி.க்கள் 32 கடிதம் எழுதி உள்ளனர்.

இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதில், தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனால் அந்த மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 32 எம்பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இந்திய கலாச்சார தோற்றம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை கலைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நிபுணர் குழு இல்லை என்றும், தற்போதைய குழுவின் ஆய்வு வரலாற்று திரிபுகளுக்கு வழிவகுத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments