மும்பை கட்டிடம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

0 787
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

அந்த மாநிலத்தின் பிவாண்டியில் கடந்த 21 ஆம் தேதி அதிகாலையில் கட்டிடம் இடிந்து விழுந்த தில், அதில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற பணியில் இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்டன.

இதில் 41 பேர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதால் மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments