தெருவெங்கும் கழிவு நீர்... பெண் பார்க்காமல் திரும்பி சென்ற மாப்பிள்ளை வீட்டார்!- சென்னையில் சம்பவம்

0 46896


தெருவில் கழிவுநீர் தேங்கியிருந்ததால் நின்று போன பெண் பார்க்கும் நிகழ்ச்சியை மாப்பிள்ளை வீட்டார் ரத்து செய்து விட்டு போய் விட்டதாக சென்னை நன்மங்கலத்தில் பொதுமக்கள் புலம்புகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு ஆகிய தெருக்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள , தெருக்களில் பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், எப்போதும் துர்நாற்றம் வீசுவதுமன் பார்க்கவே அருவெறுப்பாப இந்த தெருக்கள் காட்சியளிக்கின்றன. எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக சமீபத்தில் இந்த பகுதியில் மனதை வேதனையடைய வைக்கும் சம்பவம் நடந்தது. காந்தி தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தித்துக்கு மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வந்துள்ளனர். அப்போது, தெருவில் தேங்கியிருந்த கழிவு நீரை கடந்து பெண் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை இருந்துள்ளது. இதனால், பெண் பார்க்கும் நிகழ்ச்சியே வேண்டாம் எனவும் இந்த பகுதியில் வசிக்கும் பெண்ணும் வேண்டாம் என்றும் மாப்பிள்ளை வீட்டார் திரும்பி சென்று விட்டதாக உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது போன்று பல சம்பவங்கள் அந்த பகுதியில் நடந்திருப்பதாக பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இத்தகையை அவமானங்கள் மட்டுமல்லாமல் கழிவு நீரால் இந்த பகுதி மக்களுக்கு காலரா, டெங்கு, யானை கால் போன்ற நோய் தொற்றுகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் வீட்டினுள் பாம்பு, தவளை போன்றவை வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால், ஒருவித பயந்த நிலையிலேயே வீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நன்மங்கலம் ஊராட்சி நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்களே தற்போது நான்கு தெருக்களையும் தங்களால் முடிந்த வரை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, நன்மங்கலம் ஊராட்சி செயலாளரிடத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments