சட்டவிரோதமாக ரூ.70 கோடிக்கு மேல் போலீஸ் அதிகாரிக்கு சொத்து... சோதனையில் அம்பலம்

0 8168
சட்டவிரோதமாக ரூ.70 கோடிக்கு மேல் போலீஸ் அதிகாரிக்கு சொத்து

தெலுங்கானாவில் போலீஸ் மூத்த அதிகாரி சட்டவிரோதமாக 70 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது சோதனையில் அம்பலமாகி உள்ளது.

ராச்சகொண்டா காவல் ஆணையத்துக்குட்பட்ட ஏ.சி.பி. யெல்மகுரி நரசிம்ம ரெட்டி, வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், 25 இடங்களில் ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், அனந்தபூரில் 55 ஏக்கர் விவசாய நிலம், மாதபூரின் அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு வங்கி லாக்கர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற வணிகங்களில் முதலீடுகள் என சொத்துக்களை குவித்தது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments