நீலகிரி மாவட்டத்தில் கனமழை.. மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் பரபரப்பு

0 6229
நீலகிரி மாவட்டத்தில் கனமழை.. மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததால் பரபரப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், நீலகிரி -கூடலூர் சாலையில் மரம் விழுந்து டிரான்ஸ்பார்மர் சாய்ந்தது.

கூடலூர், பந்தலூர், நாடுகாணி, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதால்,இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை வரை 761 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments