வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு ஏன் ?

0 701
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்று மத்திய அரசு விளக்கம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் உயரும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் சிறு மற்றும் குறு விவசாயிளுக்கு உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் 86 சதவீத விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கமிஷன் ஏஜண்டுகளுக்கு விவசாயிகள் செலுத்தும் சந்தைக் கட்டணம் இந்த மசோதாவால் நீக்கப்படும்.
மேலும், விவசாயிகள் விளை பொருட்களை பதிவு செய்யப்பட்ட சந்தைகளுக்கு வெளியிலும் விற்க முடியும்.

அதே நேரத்தில், மண்டி கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர், கொள்முதல் முறையில் மாற்றமில்லை என்றும் மாநில அரசுகள் மண்டிகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments