சாத்தான்குளம் தந்தை - மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கு : காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் கோரிய ஜாமீன் மனு தள்ளுபடி

0 3402
சாத்தான்குளம் தந்தை - மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கு : காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் கோரிய ஜாமீன் மனு தள்ளுபடி

ஜெயராஜ் - பென்னிக்ஸ் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முந்தைய விசாரணையின் போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments