அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து - அதிபர் டிரம்ப்

0 1717
அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சுகாதாரத்துறையும் பாதுகாப்புத் துறையும் இணைந்து வெளியிட்ட இரண்டு ஆவணங்களில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கான திட்டம் வெளியாகியுள்ளது. தடுப்பு மருந்துக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தயாரானதும் அமெரிக்க மக்களுக்கு மிக விரைவில் எந்தவித தாமதமும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருந்து தயாரிப்பு அதிக அளவில் இல்லாத நிலை இருக்கலாம் என்பதால் சுகாதாரத்துறையினர் போன்ற முதன்மையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments