பா.ஜ.கவுக்கு ஆதரவு கருத்து... ஐ.பி.எஸ் அதிகாரி மீது கம்யூனிஸ்ட் கட்சி புகார்

0 2694

சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விதிகளை மீறி  செயல்படுவதாக  கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழக உள்துறை செயலரிடத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல் தற்போது கூடுதல் டி.ஜி.பியாக டெல்லியில் பணிபுரிகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சார்பாக குறிப்பாக பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர், உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி. பி திரிபாதி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

imageஅதில், இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர் வெறுப்பு பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் வெளியிடுகிறார். இந்த பக்கம் அதிகாரப்பூர்வமான ஒன்று, டுவிட்டர் வெரிபிகேசன் பெற்றது உதாரணமாக ஆகஸ்ட் 23- ஆம் தேதி மேற்கொண்ட பதிவில், இடதுசாரிகளும், இஸ்லாமிய கருத்து கொண்டவர்களும் இந்த நாட்டின் வரலாற்றை பல நூற்றாண்டுகளாக வல்லுறவு செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். பணியில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பொதுவெளியில் வெளிப்படுத்தும் கருத்துகள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக்கூடாது என்பது இந்திய அரசியலமைப்பு விதி . எனவே சந்தீப் மிட்டலின் கருத்துகள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லப்பட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அனுப்பப்பட்ட புகார் கடிதத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் சந்தீப் மிட்டல் வெளியிட்டதுதான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments