கப்பலை ஏவுதளமாக்கி லாங் மார்ச்-11 ராக்கெட்டை ஏவியது சீனா

0 2700
கப்பலை ஏவுதளமாக்கி லாங் மார்ச்-11 ராக்கெட்டை ஏவியது சீனா

கப்பலில் ஏவுதளம் அமைத்து ராக்கெட் ஏவி 9 செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

ஷான்டாங் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடலில் நிறுத்தியுள்ள கப்பலில் இருந்து 58 டன் எடை கொண்ட லாங் மார்ச் 11 என்ற ராக்கெட்டை சீனா ஏவியது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.23 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது லாங் மார்ச் 11.

13 நிமிடங்களுக்குள் 535 கிலோமீட்டர் பயணம் செய்த பின்னர் ஜிலின் 1 என்ற செயற்கைக் கோள் தெளிவான பூமியின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments