தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கைக்கு நீதிபதி அதிருப்தி; புதிய அறிக்கையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு

0 1074

தேர்வு நடத்துவதற்கான செலவினங்கள் குறித்த அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முழு விவரங்களுடன் கூடிய புதிய அறிக்கையை 24ம் தேதிக்குள் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முந்தைய உத்தரவின் அடிப்படையில், தேர்விற்கான செலவினங்கள் குறித்த பதில் மனுவை அண்ணா பல்கலைக்கழக தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, மாணவர்களிடம் இருந்து கல்லூரிகள் வசூலித்த கட்டணத்தை பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவில்லை எனில் அத்தொகையை மாணவர்களுக்கு திருப்பி செலுத்த உத்தரவிடாதது துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்வு நடைமுறைகளுக்கான செலவினங்களை முழு விவரங்களுடன் புதிய பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments