கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

0 1506
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

கொரோனா தொற்று தடுப்பு தொடர்பான கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்டமசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். அதன்படி, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு 200 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதற்கான மசோதாவை சட்டபேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போதோ அல்லது எரிக்கும் போதோ பொதுமக்கள் எதிர்த்தால், அபராதத்துடன் கூடிய, ஓராண்டில் இருந்து மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments