மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.370 அடியாக உயர்வு

0 723
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.370 அடியாக உயர்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 புள்ளி 370 அடியாக உயர்ந்துள்ளது.

120 அடி உயரம் கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் நேற்று 92 புள்ளி 240 அடியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 92 புள்ளி 370 அடியாக உயர்ந்துள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் இருப்பு அளவு 55 புள்ளி 402 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8,608 கனஅடியாக அதிகரித்திருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 6 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடிநீரும் வெளியேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments