நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்ப்போம் - ஜெய்ராம் ரமேஷ்

0 1122
நாடாளுமன்றத்தில் 4 மசோதாக்களை எதிர்ப்போம்- ஜெய்ராம் ரமேஷ்

வங்கி சீர்திருத்த மசோதா மற்றும் வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்களை காங்கிரஸ் தனது தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து எதிர்க்கும் என்று காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய  ஜெய்ராம் ரமேஷ் இக் கூட்டத்தொடரில், அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக 11 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

இதில், வங்கி சீர்திருத்த சட்ட மசோதா மற்றும் வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றார்.

கொரோனா பரவல் , லடாக்கில் சீன ராணுவத்துடன் மோதல், பொருளாதார வீழ்ச்சி, விமானநிலையங்கள் தனியார் மயம், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments