இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

0 1020
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. மார்கன் 42 ரன்களும், டாம் கரன் 37 ரன்களும், ரூட் 39 ரன்களும் எடுத்தனர்.

சம்பா 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடி 73 ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், அந்த அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments