மத்திய அரசின் திட்டத்தில் வீடுகள், கழிவறைகள் கட்டாமலேயே கட்டப்பட்டதாகக் கூறி வந்த வாழ்த்துக் கடிதத்தால் மக்கள் அதிர்ச்சி

0 5363
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மத்திய அரசின் திட்டத்தில் வீடுகள், கழிவறைகள் கட்டாமலேயே கட்டப்பட்டதாகக் கூறி வாழ்த்துக் கடிதம் வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மத்திய அரசின் திட்டத்தில் வீடுகள், கழிவறைகள் கட்டாமலேயே கட்டப்பட்டதாகக் கூறி வாழ்த்துக் கடிதம் வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மன்னார்குடி அருகே உள்ள கர்ணாவூர் ஊராட்சியில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் 274 வீடுகளும், தூய்மை இந்தியா திட்டத்தில் 890 கழிவறைகளும் கட்டப்பட்டதாகக் கூறி ஊராட்சி செயலரும், அதிகாரிகளும் சேர்ந்து போலி ஆவணங்களைத் தயாரித்துப் பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.

இந்த வீடுகள், கழிவறைகளைப் பார்வையிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் கமல்கிசோர் சென்றபோது தான் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கர்ணாவூர் ஊராட்சியில் அரசின் திட்டத்தில் வீடுகள் கட்டாத பலருக்கும் புதிய வீடுகள் கட்டிக்கொடுத்ததாகக் கூறி மத்திய அரசிடம் இருந்து வாழ்த்துக் கடிதம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments