அமெரிக்க திரைப்படமான நோமாட்லேண்ட் படத்துக்கு வெனீஸ் சர்வதேச திரைப்பட சிறந்த படத்துக்கான கோல்டன் லயன் விருது

0 527
அமெரிக்க திரைப்படமான நோமாட்லேண்ட் படத்துக்கு வெனீஸ் சர்வதேச திரைப்பட சிறந்த படத்துக்கான கோல்டன் லயன் விருது

இத்தாலியில் நடைபெற்ற வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கோல்டன் லயன் விருது, அமெரிக்க திரைப்படமான நோமாட்லேண்ட் படத்துக்கு வழங்கப்பட்டது.

கொரோனா பரவலால் வெனிஸ் விழாவில் கலந்து கொண்டோருக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. மொத்த எண்ணிக்கையில் பாதி அளவினரே விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் அமெரிக்கா வாழ் சீன இயக்குநரான ஸ்லோ ஜாவோவால் இயக்கிய நோமாட்லேண்ட் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அளிக்கப்பட்டது.

சிறந்த கதாநாயகனுக்கான விருது இத்தாலியின் பியர்பிரான்சிஸ்கோ பேவினோவுக்கும் (Pierfrancesco Favino) சிறந்த கதாநாயகிக்கான விருது பிரிட்டன் நடிகை வானசா கெர்பிக்கும் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments