ஆப்கான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு அனுமதிக்கக் கூடாது - அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

0 1423
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். 

தாலிபானுக்கும் ஆப்கன் அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹா நகரில் நடைபெறுகிறது.இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இது ஒரு வரலாற்று நிகழ்வு எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் காணொலி மூலமாக டெல்லியில் இருந்து பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உள்நாட்டுப் போரால் உருக்குலைந்த ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்று கூறினார்.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் ஆப்கான் மண்ணில் இருந்து களையெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments