கங்கணா பயணித்தபோது வீடியோ, செல்பி எடுக்கப்பட்ட விவகாரம்-இண்டிகோ விமான நிறுவனத்திற்கு எச்சரிக்கை

0 2084

நடிகை கங்கணா அண்மையில் மும்பைக்கு விமானத்தில் வந்தபோது, விதிகளை மீறி, போட்டோ, வீடியோ, செல்பி எடுக்க அனுமதித்தது தொடர்பான விவகாரத்தில், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம், கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் இனியும் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட வழித்தடத்தில், தங்கள் நிறுவன விமான சேவை 2 வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்தி நடிகை கங்கணா ரணாவத், கடந்த 9ஆம் தேதி, சண்டிகரில் இருந்து, மும்பைக்கு இண்டிகோ நிறுவன விமானத்தில் வந்த போது, விதிகளை மீறி, செய்தியாளர்கள், பயணிகள் உட்பட பலரும், முண்டியடித்துக் கொண்டு, போட்டோ, வீடியோ, செல்பி எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments