"AstraZeneca தடுப்பு மருந்து சோதனை நிறுத்தம்" விழிப்புக்கான அழைப்பு தான்; ஆராய்ச்சியாளர்கள் ஊக்கமிழந்து விடக் கூடாது - WHO

0 1560
அஸ்ட்ராசெனேக்கா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது ஒரு விழிப்புக்கான அழைப்பு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராசெனேக்கா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது ஒரு விழிப்புக்கான அழைப்பு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தைச் சோதனை முறையில் செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளரான சவுமியா சுவாமிநாதன் வெளியிட்டுள்ள காணொலியில், தடுப்பு மருந்துச் சோதனை நிறுத்தி வைக்கப்பட்ட செயல் ஒரு விழிப்புக்கான அழைப்பு தான் என்றும், இதனால் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கமிழந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு முன்னேற்றத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும் நாம் அதற்குத் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments