பெற்றோர் தன்னை விட தங்கை மீது அதிக பாசம் காட்டியதால் தங்கையை கொன்ற சிறுமி

0 4857
பெற்றோர் தன்னை விட தங்கை மீது அதிக பாசம் காட்டியதால் தங்கையை கொன்ற சிறுமி

ஆந்திராவில் 11 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், தங்கை மீது பெற்றோர் காட்டிய பாசத்தை பொறுத்து கொள்ள முடியாமல் தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டதாக 5 வயது சிறுமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்த காவியா என்பவருக்கு ஏற்கனவே 5 வயதில் நிர்மலா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டில் படுக்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீயை காணாமல் தேடிய பெற்றோர், வீட்டின் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் 5 வயது அக்காவான சிறுமி நிர்மலாவிடம் விசாரித்த போது, தங்கை பிறந்தது முதல் பெற்றோர் தன்னை விட தங்கை மீது அதிக பாசம் காட்டியதால் தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாக அப்பாவியாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments