வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு 6195 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு

0 3240
வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு 6195 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு

தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக மத்திய அரசு ஆறாயிரத்து 195 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

ஆந்திரம், அசாம், தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ஆறாயிரத்து 195 கோடி ரூபாயை வழங்க 15ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது.

இதை ஏற்று அந்தந்த மாநிலங்களுக்கான  தொகையை விடுவிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அதிகப்பட்சமாகக் கேரளத்துக்கு ஆயிரத்து 276 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு 335 கோடியே 41 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் நிதித் தேவையைச் சமாளிக்க மாநில அரசுகளுக்கு இது உதவும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments