பகைமையைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் ஐநா.சபையின் மேடைகளை பயன்படுத்துவதாக இந்தியா கடும் கண்டனம்

0 668
பகைமையைத் தூண்டும் வகையில் பாகிஸ்தான் ஐநா.சபையின் மேடைகளை பயன்படுத்துவதாக இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவுக்கு எதிராக பகைமையைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு ஐநா.சபையின் மேடைகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐநா.சார்பில் நடைபெற்ற அமைதிக்கான கலாச்சாரம் என்ற காணொலி வாயிலான கருத்தரங்கில் இந்தியா தனது கருத்துகளை எடுத்து வைத்தது.

அப்போது பாகிஸ்தான் புகாருக்கு தகுந்த பதிலடி கொடுத்ததுடன், சிறுபான்மை மக்கள் சட்டரீதியான சம உரிமையைப் பெறுவதாக இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

ஆனால் பாகிஸ்தானில் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படுவதையும் சிறுபான்மை இனப் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக் காட்டிய இந்தியா, எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானின் உள்நோக்கத்தை கேள்வி எழுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments