சவுதிக்கு ஓட்டுநர் வேலைக்கு அழைத்து சென்று ஒட்டகம் மேய்க்க சொல்லி கொடுமைப்படுத்துவதாக கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ள இளைஞர்

0 45306
சவுதி அரேபியாவுக்கு ஓட்டுநர் வேலைக்கு சென்ற தன்னை கொத்தடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க விடுவதால் காப்பாற்றும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு ஓட்டுநர் வேலைக்கு சென்ற தன்னை கொத்தடிமையாக்கி ஒட்டகம் மேய்க்க விடுவதால் காப்பாற்றும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

லட்சியம் கிராமத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் டிப்ளமோ படித்து விட்டு 8 மாதங்களுக்கு முன்னதாக சவுதி அரேபியாவுக்கு ஓட்டுநர் வேலைக்கு சென்றுள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டி டூரிஸ்ட் விசாவில் சென்ற அவரை 2 மாதங்கள் மட்டும் ஓட்டுநர் வேலை கொடுத்து விட்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டதாக தனது தந்தைக்கு அனுப்பிய செல்போன் வீடியோவில் மனோஜ் கூறியுள்ளர்.

அதுமட்டுமின்றி, தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், சாப்பிட உணவாக பண் மட்டும் தருவதால் காப்பாற்றும்படி அந்த வீடியோவில் மனோஜ் கதறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments