ரிலையன்சின் பங்குகள் சாதனை அளவாக 2.95 சதவிகிதம் உயர்ந்தன

0 703
ரிலையன்ஸ் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனமான சில்வர் லேக் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்ற தகவலை தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு சாதனை அளவாக 2.95 சதவிகிதம் உயர்ந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனமான சில்வர் லேக் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்ற தகவலை தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு சாதனை அளவாக 2.95 சதவிகிதம் உயர்ந்தது.

ரிலையன்ஸ் பங்குகள் உச்சத்தை தொட்ட நிலையில், அதன் சந்தைமுதலீட்டு மதிப்பு 14.35 லட்சம் கோடியாகவும், பகுதி அளவு செலுத்தப்பட்ட உரிமைப் பங்குகளின் மதிப்பு 57,000 கோடியாகவும் அதிகரித்தது.

இதை அடுத்து ரிலையன்சின் மொத்த சந்தை மதிப்பு 15 லட்சம் கோடியை தொட்டுள்ளது.  இதனிடையே சில்லறை வணிகத்தில் 15 சதவிகித பங்குகளை விற்று சுமார் 60,000 கோடி ரூபாயை திரட்ட ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments