கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து டிரம்ப்புக்கு ஜனவரியிலேயே தெரியும்... பாப் உட்வர்ட் எழுதிய புத்தகத்தில் புதிய தகவல்கள்

0 966
கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து டிரம்ப்புக்கு ஜனவரியிலேயே தெரியும்... பாப் உட்வர்ட் எழுதிய புத்தகத்தில் புதிய தகவல்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு கொரோனா வைரஸ் பரவலின் தீவிரம் குறித்து ஜனவரி மாதத்திலேயே தெரியும் என்றும் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அமெரிக்க பத்திரிகையாளரான பாப் உட்வர்ட் எழுதியுள்ள புதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிடம் டிரம்ப் கொரோனா குறித்து பேசும் போது உங்கள் வழக்கமான ஃப்ளூ காய்ச்சலைவிட இது மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்டதாக அந்த பத்திரிகையாளர் தமது நூலில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 28ம் தேதி நடைபெற்ற ஒரு அலுவல் ரீதியான ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரெய்ன் டிரம்பிடம் எச்சரிக்கை விடுத்ததையும் நூலாசிரியர் நினைவு கூர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments