காஷ்மீரில் ராணுவம் நடத்திய சோதனையில் சீன துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது

0 2719
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்பொது 6 சீன துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்பொது 6 சீன துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க போலீசார், ராணுவம் இணைந்த கூட்டுப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் வாகன சோதனைகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், குல்காம் மாவட்டம் ஜவகர் சுரங்கம் அருகே வந்த ஒரு லாரியை பாதுகாப்பு படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, எம்4 யுஎஸ் கார்பைன் துப்பாக்கி, 6 சீன துப்பாக்கிகள் மற்றும் மேகசின்கள் இருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், லாரியில் இருந்த 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments