கடன் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

0 2264
கடன் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்ப பெற பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

கடன் வழங்குவதற்கான முன்னுரிமை குறித்து ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கு முன் தமிழகத்தில் இருந்த 32 மாவட்டங்களும், கடன் பெறுவதற்கான முன்னுரிமை மாவட்டங்களாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கடனைப் பெற்றவர்கள், உரிய முறைப்படி அதனைத் திருப்பிச் செலுத்தி வரும் போது, அவர்களுக்கு அபராதம் அளிக்கும் விதத்தில் புதிய விதிமுறைகள் இருக்க கூடாது என்றும், ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மாவட்டங்களுக்கு கடன் அளிப்பதை குறைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments