கிசான் திட்டம் - ரூ.110 கோடி மோசடி முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்

0 4012
பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் விளக்கம்

கிசான் திட்டம் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாகக் கூறியுள்ள வேளாண்துறை முதன்மைச் செயலாளர், இதுவரை 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ககன் தீப் சிங் பேடி, இந்த திட்டத்தில் விவசாயிகள் தாங்களாகவே இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் விவசாயிகளின் தகவலைப் பெற்று, தனியார் கணினி மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்த ககன் தீப் சிங் பேடி, இந்த மோசடி தொடர்பாக 3 உயரதிகாரிகள் உள்ளிட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், பல்வேறு நிலைகளில் இதுவரை 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

கிசான் திட்டத்தில் தமிழகத்தில் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கூறிய வேளாண்துறை முதன்மைச் செயலாளர், இதுவரை 32 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது என்றும், முறைகேடாக பெறப்பட்ட ஊக்கத் தொகையை 45 நாட்களில் முழுவதுமாக மீட்டுவிடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என சிபிசிஐடி கைகாட்டும் அதிகாரிகள் மீது தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ககன்தீப் சிங், முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments