பெருங்குடி மின்னணு நிறுவன வளாகத்தில் 2வது மாநில தரவு மையம் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு

0 498
பெருங்குடி மின்னணு நிறுவன வளாகத்தில் 2வது மாநில தரவு மையம் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறப்பு

சென்னை பெருங்குடி மின்னணு நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 2வது அதிநவீன மாநில தரவு மையத்தை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சைபர் பாதுகாப்பு கட்டமைப்புத் திட்டத்தினை செயல்படுத்திடும் விதமாக, சிஇஆர்டி டிஎன்.யின் https://cert.tn.gov.in என்ற இணையதளத்தையும் துவங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments