மாநிலங்களவை துணைத்தலைவர் யார்? வருகிற 14ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

0 839

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வருகிற 14ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில், வேட்பு மனுக்களை வரும் 11-ஆம் தேதி நண்பகல் வரை தாக்கல் செய்யலாம் என்றும், 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தள எம்.பியான ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments