கலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் சிறிய விமானம் மூலம் மீட்பு

0 591

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர், சிறிய விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஃப்ரெஸ்னோ, சான் பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ மாவட்டங்களில் 3 பெரிய காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. க்ரீக் காட்டுத் தீயால் ஃப்ரெஸ்னோவில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் எரிந்து நாசமானது.

சியரா தேசிய வனப்பகுதியில் பிரபல பொழுதுபோக்கு தளமான மாமத் நீர்த்தேக்கத்துக்கு அருகே காட்டுத் தீ வேகமாக பரவி வரும் நிலையில், சாலையை மூடி பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதில் லேசான தீக்காயங்களுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments