நாடு முழுவதும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் தொடக்கம்

0 891
ராணுவம், விமானப்படை, கடற்படை உள்பட பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள பிரிவுகளில் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.

ராணுவம், விமானப்படை, கடற்படை உள்பட பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள பிரிவுகளில் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 

ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் NDA, NA தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக இந்த முறை இன்று ஒரே நாளில்  நடத்தப்படுகிறது. 

காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை கணிதப் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுத்திறன் பிரிவுக்கான தேர்வு நடைபெறுகிறது.

சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில்  288 பேர் முகக் கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியைப் பின்பற்றி தேர்வு எழுதினர்.  இன்று மாலையே  விடைக்குறிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments