நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் வசிப்பதற்கு தகுதியற்றவர்-சிவசேனா

0 2141
நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் வசிப்பதற்கு தகுதியற்றவர்-சிவசேனா

நடிகை கங்கனா ரனாவத் மும்பையில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

சுஷாந்த்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் மிரட்டப்படுவதை சுட்டிக்காட்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை போல மும்பை இருப்பதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்த கங்கனா, மும்பை பாதுகாப்பற்ற நகரமாகிவிட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில் மகராஷ்டிராவையோ, மும்பையையோ பாதுகாப்பில்லாததாக கருதுவோர் இங்கு வசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்.எல்.ஏ பிரதாப் சர்நாயக், மும்பை வந்தால் கங்கனாவை தங்களது மகளிரணியினர் மூலம் தாக்க போவதாக கூறினார். இதையடுத்து வரும் 9ந் தேதி அங்கு செல்ல உள்ளதாக கங்கனா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments