செப் 9 மும்பை திரும்புகிறேன் -முடிந்தால் தடுத்து நிறுத்துங்கள் என சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு நடிகை கங்கணா சவால்

0 3617
மும்பைக்கு வர வேண்டாம் என்று சொன்ன சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு சவால் விடுத்துள்ள நடிகை கங்கனா ரணாவத் தாம் 9ம் தேதி மும்பை திரும்புவதாகவும் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.

கங்கனா தனது சொந்த ஊரான மணாலியில் தற்போது வசித்து வருகிறார். இதுபற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று தமக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறினார்.

சுஷாந்த் சிங் மரணத்தில் உண்மைகளை மறைப்பதாக மும்பைக் காவல்துறைக்கு எதிராக கங்கனா ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இதை எதிர்த்த சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், மும்பைக் காவல்துறையை அவமதிக்கும் செயல் இது.

அவரை மும்பைக்கு வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதையடுத்து தனது மும்பைப் பயணத் திட்டத்தை கங்கனா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments