ஏசி இயந்திரத்தில் யுவி விளக்குகளைப் பொருத்தி வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம்.. மாணவர்களின் அசத்தல் முயற்சி..!

0 1705

ஏசி இயந்திரத்தில் யுவி விளக்குகளைப் பொருத்தி, வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மாணவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குறிப்பிட்ட சில மின் சாதனங்கள் குறிப்பிட்ட வெப்ப நிலையில் இயங்க ஏசி தேவைப்படுவதால் அதன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக புற ஊதாக் கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்கை ஏசி இயந்திரத்தின் காற்றை உள்வாங்கும் பகுதியில் பொருத்தி, அதன் மூலம் கிருமிகளை அழிக்கும் தொழில்நுட்பத்தை அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு துறை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

யுவி விளக்கிலிருந்து வெளிப்படும் 254 நேனோ மீட்டர் குறுகிய அலைநீளம் கொண்ட கதிர்கள், கிருமிகளை செயலிழக்கச் செய்யும் என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments