ரஷ்யாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் - சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க வாய்ப்பு...

0 855
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும் (Wei Fenghe) சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், எல்லை பிரச்சனை குறித்து பேச்சு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் இடையே ராஜ்நாத் சிங்குடன் பேச, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பு நடைபெறுமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இன்று மாலை ராஜ்நாத் சிங்- வெய் ஃபெங் சந்திக்க உள்ளதாகவும், அப்போது எல்லைத் தகராறு குறித்து பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்ட பிறகு, அரசு நிலையில் நடைபெறும் மிகமுக்கியமான பேச்சுவார்த்தையாக இது இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments