ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

0 540
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஔவையார், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் 2 கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை உரித்தாக்குதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments