100 நாட்களுக்குப் பிறகு தாய்லாந்தில் ஒருவருக்கு கொரோனா என தகவல்

0 887
100 நாட்களுக்குப் பிறகு தாய்லாந்தில் ஒருவருக்கு கொரோனா என தகவல்

தாய்லாந்து நாட்டில் 100 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடுமையான ஊரடங்கு, நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக, உள்ளூர் பகுதியில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்தவர் பாங்காக்கில் போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சிறையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, அந்நாட்டின் முக்கிய வருவாய்த்துறையான சுற்றுலாத்துறை பெரும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments