சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

0 1093
சென்னையில் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு அதன்பின் தேவைக்கேற்பப் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

விமான நிலையம் - வண்ணார்பேட்டை தடத்தில் திங்களன்றும், பரங்கிமலை - சென்ட்ரல் தடத்தில் புதனன்றும் போக்குவரத்து தொடங்கும்.

மெட்ரோ ரயில் வளாகத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், நுழைவாயிலில் அனைவருக்கும் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments