2 இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின

0 4069
2 இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள்

திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ், தனது குடும்பத்தினர் 4 பேர் என மொத்தம் 5 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பெங்களூரு நோக்கி சென்றுள்ளனர்.

இதேபோல, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் கருத்தானுர் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற 25 வயது இளைஞர் செங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் இடதுபுறம் உள்ள பெட்ரோல் நிலையத்தை நோக்கி அவர் இருசக்கர வாகனத்தை திருப்பியபோது, குடும்பத்தினருடன் வந்த சுரேஷின் இருசக்கர வாகனத்துடன் மோதியதில், அனைவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

image

கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிவிடி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இளைஞர் ஹரீசுக்கு கால் உடைந்த நிலையில், சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தலையில் காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிலையத்திற்கு திரும்பிய போது ஹரீஸ் அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments