ராமர் கோவில் திட்ட வரைபடம்.. 9துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு அனுமதி..!

0 1415
அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டிட திட்ட வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கும் நடவடிக்கையை அயோத்தியா வளர்ச்சிக் குழுமம் துவக்கி உள்ளது.

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டிட திட்ட வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கும் நடவடிக்கையை அயோத்தியா வளர்ச்சிக் குழுமம் துவக்கி உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை நிர்வகிக்க தனி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி கோவிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டு, பிரதமர் மோடி அதில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கடந்த 29 ஆம் தேதி ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளை, கோவிலுக்கான திட்ட வரைபடத்தை உள்ளூர் வளர்ச்சி குழுமத்திடம் சமர்ப்பித்தது.

வருவாய், நகராட்சி நிர்வாகம், சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் உள்ளிட்ட ஒன்பது துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு ராமர் கோவில் திட்ட வரைபடத்திற்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உரிமக்கட்டணங்கள் மற்றும் ஐந்து கோடி ரூபாய் செஸ் தொகையையும் கோவில் கட்டும் அறக்கட்டளை அரசுக்கு செலுத்த வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments