பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்குப் பயணம்

0 915
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்குப் பயணம்

சாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குவுடன் இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றிபெற்றதன் 75ஆண்டு விழாவிலும் ராஜ்நாத் பங்கேற்க உள்ளார். இந்தப் பயணத்தின்போது சீனப் பாதுகாப்பு அமைச்சரை ராஜ்நாத் சந்தித்துப் பேச மாட்டார் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments