குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவுக்கு வரவேற்கிறோம்-ராம்தாஸ் அத்வாலே

0 2087
குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவுக்கு வரவேற்கிறோம்-ராம்தாஸ் அத்வாலே

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபலை பாஜகவுக்கு வரவேற்பதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக இடைக்கால தலைவர் சோனியாவுக்கு ஆசாத் உள்ளிட்டோர் கடிதம் எழுதியிருந்தனர். இதனால் அக்கட்சிக்குள் கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான (Republican Party of India) அத்வாலே, காங்கிரசுக்காக ஆசாத்தும், சிபலும் அதிகம் உழைத்துள்ளதாகவும், அப்படியிருக்கையில் அவர்கள் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்தால், கட்சியை விலகி விட வேண்டும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments