கலைவாணர் அரங்கில் வருகிற 14ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.!

0 1204
கலைவாணர் அரங்கில் வருகிற 14ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை.!

சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்திலுள்ள கலைவாணர் அரங்கில் 14ம் தேதி கூட்டப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வந்து நிலையில், அங்குள்ள இடநெருக்கடி காரணமாக கொரோனா பரவும் ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு மாற்று இடத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கிலுள்ள 3ஆவது தளத்தில் இருக்கும் பல்வகை கூட்டரங்கில் கூட்டத் தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments