தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற வீட்டுக்குள் சமாதி கட்டிய மகன் : உங்கள் வீட்டிலா வைத்தேன் ? என போலீசாரிடம் வாக்குவாதம்

0 25369
பெரம்பலூர் அருகே இறந்துபோன தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாகக் கூறி, குடியிருக்கும் வீட்டுக்குள்ளேயே அவரது உடலை வைத்து சமாதி எழுப்பிய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே இறந்துபோன தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாகக் கூறி, குடியிருக்கும் வீட்டுக்குள்ளேயே அவரது உடலை வைத்து சமாதி எழுப்பிய மகனால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியவரின் உடலை போலீசார் சமாதியிலிருந்து எடுக்க முயன்றபோது குடும்பமே சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே களரம்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி திங்கட்கிழமை இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

முதியவரின் உடலை அவரது மகன், வீட்டு வாசலிலுள்ள தென்னை மரத்தடியில் புதைக்க முயற்சி செய்துள்ளார். அதற்கு ஊர்மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கவே, குடும்பத்தினர் உதவியுடன் வீட்டுக்குள்ளேயே சுவரை ஒட்டி தந்தையின் சடலத்தை சாய்த்து வைத்து, சுற்றிலும் காங்கிரீட்டால் சுவர் எழுப்பியுள்ளார்.

இரவோடு இரவாக சமாதி எழுப்பும் பணிகள் முடிந்த நிலையில், ஊர்மக்கள் கொடுத்த தகவலின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் அங்கு வந்துள்ளனர். வீட்டுக்குள் முதியவரின் சடலத்தைப் புதைத்தது குறித்து கேட்டபோது, அது தனது தந்தையின் கடைசி ஆசை என்று பாலகிருஷ்ணன் கூறினார்.

வருவாய்த்துறையினர் முதியவரின் சடலத்தை அகற்ற முயன்றபோது பாலகிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பெரும் போராட்டத்துக்கு இடையே போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

”என் தந்தையை என் வீட்டில்தானே சமாதி வைத்தேன். உங்கள் வீட்டிலா வைத்தேன் ?” என பாலகிருஷ்ணன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

ஒரு வழியாக முதியவரின் சடலத்தை அங்கிருந்து அகற்றிய வருவாய்த்துறையினர், ஊர் மக்கள் உதவியுடன் மயானம் எடுத்துச் சென்று எரியூட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments